விருத்தாசலம்-செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு, மணிமுக்தாற்றங்கரையில் உள்ள, கிராம தேவதையான செல்லியம்மனுக்கு, கடந்த மாதம் 31ம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. முன்னதாக, விருத்தகிரீஸ்வரர் கோவில், சன்னதி வீதியில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர், நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் செல்லியம்மன் தேர் வீதியுலா வந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.