பன்னீர்செல்வம் பேச்சாளர்களுக்கு ஏமாற்றம்!

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (13+ 4) | |
Advertisement
சென்னை :இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் தரப்புபேச்சாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. பழனிசாமி தரப்பு கொடுத்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை ஏற்றதேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் தரப்பு பட்டியலை நிராகரித்தது.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்பில், முன்னாள்எம்.எல்.ஏ.,
பன்னீர்செல்வம்   பேச்சாளர்கள்,  ஏமாற்றம்!

சென்னை :இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் தரப்புபேச்சாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. பழனிசாமி தரப்பு கொடுத்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை ஏற்றதேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் தரப்பு பட்டியலை நிராகரித்தது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்பில், முன்னாள்எம்.எல்.ஏ., தென்னரசு; பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பு தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தென்னரசு, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆனார். அவருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


நிராகரிப்பு



ஒரு வழியாக வேட்பாளர், சின்னம் தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வந்த நிலையில், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக, பன்னீர்செல்வம் அணியினர் அறிவித்தனர்.

இதற்கிடையில், இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய, பழனிசாமி தரப்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள்; பன்னீர்செல்வம் தரப்பில், 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல், தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டன.

உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, இடைத்தேர்தல் தொடர்பான விஷயங்களுக்கு, அ.தி.மு.க., அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறுவதை ஏற்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி, பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் 40 பேர் பட்டியலை, தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது; பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்ட பட்டியல் நிராகரிக்கப்பட்டது.


இடம் பெறவில்லை



நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்திற்கு செல்லும்போது, அவர்களுக்கான போக்குவரத்து செலவு, வேட்பாளர் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது.

தற்போது தேர்தல் ஆணையம், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை நிராகரித்ததால், பன்னீர்செல்வம் தரப்பு பேச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பழனிசாமி தரப்பு அளித்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, விஸ்வ நாதன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடிகர், நடிகையர் யாரும் இடம் பெறவில்லை.

அமைதி காக்க முடிவு!

இடைத்தேர்தலில் வேட்பாளரை வாபஸ் பெற்று, 'இரட்டை இலை' சின்னம் கிடைக்க உதவிய போதிலும், பன்னீர்செல்வம் தரப்பினரை, பழனிசாமி தரப்பினர் கண்டுகொள்வதில்லை; 'தேர்தல் பிரசாரத்துக்கும் அழைப்பதில்லை' என்ற முடிவில் உள்ளனர்.எனவே, பன்னீர்செல்வம் பிரசாரத்துக்கு செல்ல வாய்ப்பில்லை. அவரது ஆதரவாளர்களும், பழனிசாமி அழைத்தால் தேர்தல் பணியாற்றுவது, இல்லையெனில் அமைதி காப்பது என்ற முடிவில் உள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13+ 4)

Sri - Memphis,யூ.எஸ்.ஏ
09-பிப்-202323:02:18 IST Report Abuse
Sri அதென்ன 'பன்னீர் சோடா', பாட்டில் - காலியா?
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
09-பிப்-202320:03:51 IST Report Abuse
jagan தென் மாவட்டங்களில் பழனிசாமின் கவுண்டர் கட்சி தோற்க வாய்ப்புள்ளது. போன முறை, 20-க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில் 2000 வாக்குகளுக்கும் குறைவாக தோற்றார்கள் (OPS கூட இருந்து கூட). இங்கெல்லாம் TTV தினகரன் பெற்றுள்ள வாக்குகள் 5000-7000 வாக்குகள். இப்போ தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓரங்கட்டபட்டுள்ள எரிச்சல் நன்றாக தெரிகிறது. பழனி சாமியின் கவுண்டர் கட்சி மேற்கு மாவட்ட ரீஜனல் பார்ட்டி
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
09-பிப்-202318:58:46 IST Report Abuse
Godyes ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு தேர்தலே தேவை இல்லை. அதில் எந்த கட்சி வென்றாலும் அடுத்த மே 2026 சட்ட சபை தேர்தல் வரை சட்டசபையில் அமர்பவரால் தொகுதி மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில் லை. அவருக்காகும் செலவும் வீண். தொகுதி கவனிப்பு பொறுப்பை இடைக்கால ஏற்பாடாக அத்தொகுதி சார்ந்த எம்பியிடம் ஒப்படைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X