சீர்காழி:சீர்காழியில் லாரி மீது டூவீலர் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத் சீர்காழியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் இன்று இரவு யமஹா டூ வீலர் ஒன்றில் கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் முன்னே சென்ற அசோக் லேலண்ட் லாரியின் பின்புறம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்
அப்போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய ஹரி பிரசாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து வந்து ஹரிபிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளது
லாரி டிரைவர் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரபாகரன் 36 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் வாகன விபத்தில்சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Advertisement