பெஷாவர், பாகிஸ்தானில், கொடூரத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தெஹ்ரிக் - இ - பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ௧௨ பேரை, அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பாகிஸ்தான் தலிபான் என்று அழைக்கப்படும் தெஹ்ரிக் - இ - பாகிஸ்தான் அமைப்பினர், தொடர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
![]()
|
கடந்த 2014ல், பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளிக்குள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்திய இவர்கள், ௧௩௧ மாணவ - மாணவியர் உட்பட ௧௫௦ பேரை கொடூரமாக சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஆறு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில், ஜன., ௩௦ம் தேதி, பெஷாவர் நகரில் மசூதியில் தொழுகை நடந்தபோது, இந்த அமைப்பினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 101 பேர் பரிதாபமாக பலியாகினர்; 200 பேர் காயமடைந்தனர்.
பெஷாவர் மசூதி தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தது.
இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், லக்கி மர்வத் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, பயங்கரவாத எதிர்ப்புப் படையினருக்கு நேற்று தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் சென்ற வாகனத்தை, பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் வழிமறித்தனர்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், ௧௨ பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement