இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டி நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடி குண்டு தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கில் அப்போதை பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப் முதல் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.
![]()
|
லாகூர் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விசாரணை கோரி தாக்கல் செய்த அப்பீல் மனு மீது நீதிபதி முகமது அமீர் பஹட்டி இன்று விசாரணை நடத்துகிறார்.
முன்னதாக இந்த வழக்கில் முஷாராப் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது முஷாரப் இறந்துவிட்டார். அவரது பெயர் குற்றவாளிகள் பெயர் பட்டியலலிருந்து நீக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement