வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'டோட்டல்எனர்ஜிஸ்' நிறுவனம், 'அதானி' குழுமத்துடன் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் ஹைட்ரஜன் திட்டத்தை, நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
அதானி குழுமத்தில், மிக அதிகளவில் முதலீடு செய்திருக்கும் அன்னிய முதலீட்டாளர்களில் ஒன்று, டோட்டல் எனர்ஜிஸ். இந்நிறுவனம், அதானி குழுமத்துடன் இணைந்து மேற்கொள்ள விருக்கும் 4.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
![]()
|
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, இம்முடிவை 'டோட்டல்எனர்ஜிஸ்' எடுத்துள்ளது. ஹிண்டன்பர்க் விவகாரத்தில் தெளிவு ஏற்படும் வரை, இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.