வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டமாஸ்கஸ்: மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
சிரியாவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் அந்தக் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதே நேரத்தில் அந்தக் குழந்தையின் தாய் உயிரிழந்தார்.
![]()
|
இதுபோன்று சிரியாவில் ஒரு கட்டடத்தின் அடியில், 17 மணி நேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுமி மற்றும் அவருடைய தம்பி உயிருடன் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக ஐ.நா., பிரதிநிதி முகமது சாபா, சமூக வலைதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தச் சிறுமி, இடிபாடுகள் இடையே சிக்கியுள்ளார். சுவருக்கு அடியில் சிக்கியுள்ள அந்தச் சிறுமி, தன் தம்பிக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவனுடைய தலையை பிடித்துள்ளார்.இந்தப் படம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.