ஆடத் தெரியாதவங்க 'தெரு கோணல்'னு சொன்ன கதையால்ல இருக்கு!

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பிரசார பணிகள் முழு வீச்சில் நடந்தன. இந்த சூழலில், 'அ.ம.மு.க.,வுக்கு, 'பிரஷர் குக்கர்' சின்னத்தை ஒதுக்க இயலாது' என, தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. 'லோக்சபா தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வர உள்ள சூழலில், புதிய சின்னத்தில் போட்டியிடுவது, தேவை இல்லாத குழப்பத்தை
Dhinakaran, TTV Dhinakaran, TTV, தினகரன்

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பிரசார பணிகள் முழு வீச்சில் நடந்தன. இந்த சூழலில், 'அ.ம.மு.க.,வுக்கு, 'பிரஷர் குக்கர்' சின்னத்தை ஒதுக்க இயலாது' என, தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. 'லோக்சபா தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வர உள்ள சூழலில், புதிய சின்னத்தில் போட்டியிடுவது, தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்; எனவே, போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும்' என்ற நிர்வாகிகள் ஆலோசனையை கருத்தில் வைத்து, அ.ம.மு.க., போட்டியிடவில்லை.


டவுட் தனபாலு: ஆடத் தெரியாதவங்க, 'தெரு கோணல்'னு குற்றம் சொன்ன கதையால்ல இருக்கு... நீங்க நில்லுங்க, நிற்காம போங்க... ஆனா, இல்லவே இல்லாத, 'நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்டு முடிவு எடுத்தேன்'னு சொல்றதை, உங்க வீட்டு வாட்ச்மேன் கூட நம்ப மாட்டாருங்கிறதுல, 'டவுட்'டே இல்லை!


***


புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியான, பா.ஜ., ஆதரவு தரும் அ.தி.மு.க., வேட்பாளருக்கு, புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் அனைவரும், தங்கள் முழு ஆதரவை தர வேண்டும்; வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.


latest tamil news

டவுட் தனபாலு: அடடா... இடைத்தேர்தல்ல 'ஈசி'யா ஜெயிச்சிடலாம்னு, தி.மு.க., தரப்பு தெனாவெட்டா இருந்ததே... இப்ப, உங்க கட்சியின் அமோக ஆதரவை, அ.தி.மு.க.,வுக்கு குடுத்துட்டதால, ஆளுங்கட்சியின் வெற்றி, கேள்விக்குறி ஆகிடுமோன்னு, 'டவுட்' வருதே!


***


முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருவர் தான் பன்னீர்செல்வத்தை முழுமையாக அறிந்து, அவரது திறமையை, விசுவாசத்தை, உழைப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர். அப்படிப்பட்ட நீதி தேவதை தற்போது இல்லையே என்பதை நினைக்கும்போது, மனம் கலங்குகிறது.


டவுட் தனபாலு: அந்த நீதி தேவதை மட்டும் இப்ப இருந்திருந்தா, அப்பாவுக்கு சாமரம் வீசி இப்படி அறிக்கை விடுற அளவுக்கு நீங்க வளர்ந்திருக்கவே முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-பிப்-202323:47:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //ஆடத் தெரியாதவங்க 'தெரு கோணல்'னு சொன்ன கதையால்ல இருக்கு...// இதை சொல்லி கிண்டலடிக்கிறவனுக்கு காலே இல்லைங்குறது தான் காமெடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X