வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நேர்மறையான ஆற்றலை பரப்ப, பிப்., 14ல் பசு அணைப்பு தினத்தைக் கொண்டாட வேண்டும் என, பொதுமக்களை இந்திய விலங்குகள் நலவாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆண்டுதோறும் பிப்., 14ல் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அன்றைய தினத்தை பசுவை நினைவுகூரும் வகையில், பசு அணைப்பு தினமாக கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுஉள்ளது.
இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்ற, பிப்., 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக, பசுக்களை நேசிக்கும் அனைவரும் கொண்டாடலாம்.
![]()
|
பசுக்களை அணைப்பதால் உணர்ச்சி பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்கிறது. மேற்கத்திய நாகரிகத்தால், நம் கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை மறந்துவிட்டோம். அழிவின் விளிம்பில் உள்ள வேத மரபுகளை மீட்டெடுக்க, நாம் அனைவரும் பசு அணைப்பு தினத்தை கொண்டாடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.