கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: 7 பேர் பயங்கரவாதிகளானது அம்பலம்

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (25) | |
Advertisement
கோவை: போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஏழு பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், இன்ஜி., பட்டதாரி ஜமேஷா முபின், 29, பலியானார். அவர், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்த சதித்திட்டம்
Coimbatore car blast, Terrorists,Jamesha Mubin, கோவை கார் குண்டுவெடிப்பு, ஜமேஷா முபின், என்ஐஏ, Coimbatore, NIA,கோவை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஏழு பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், இன்ஜி., பட்டதாரி ஜமேஷா முபின், 29, பலியானார். அவர், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியது, விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜமேஷா முபின் வீட்டில் இருந்து, 75 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வழக்கில் ஜமேஷா முபின், கூட்டாளிகளான, 11 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், முகமது தவ்பீக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரும் கடந்த, 2ம் தேதி என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கோவை அழைத்து வரப்பட்டனர்.


latest tamil news

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏழு பேருக்கும் வழங்கப்பட்ட போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அழைத்துச் சென்று, என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் கூறுகையில்,'ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (25)

s. mohan -  ( Posted via: Dinamalar Android App )
10-பிப்-202305:17:33 IST Report Abuse
s. mohan இந்த மாதிரி கொடிய மிருகங்களை பிடித்து விசாரணை செய்து தவறு நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு உடனே பொதுமக்கள் முன்னிலையில் சாட்டையால் அடித்தே கொல்லவேண்டும்.
Rate this:
Cancel
09-பிப்-202320:57:21 IST Report Abuse
பேசும் தமிழன் இதற்கு தான் தான் ...இவர்களுக்கு எவனும் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேங்கிறாங்க!!! வாடகைக்கு வீடு எடுத்து .....குண்டு தயாரித்தால் எப்படி ???
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
09-பிப்-202316:10:06 IST Report Abuse
R S BALA இவனுவோல மு...ன்னு சொன்னது சரிதான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X