வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஏழு பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், இன்ஜி., பட்டதாரி ஜமேஷா முபின், 29, பலியானார். அவர், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியது, விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜமேஷா முபின் வீட்டில் இருந்து, 75 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில் ஜமேஷா முபின், கூட்டாளிகளான, 11 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், முகமது தவ்பீக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரும் கடந்த, 2ம் தேதி என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கோவை அழைத்து வரப்பட்டனர்.
![]()
|
போலீசார் கூறுகையில்,'ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன' என்றனர்.