வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மணல் சிமென்ட் செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு காரணமாக வீடுகளுக்கான கட்டுமான செலவு சதுர அடிக்கு 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது அடுத்த சில வாரங்களில் வீட்டின் விலையிலும் எதிரொலிக்கும் என கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா, ஊரடங்கால் 2020-2021ம் ஆண்டுகளில் கட்டுமான பொருட்கள் பணியாளர் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. பின் 2022ல் துவங்கி படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கொரோனா தொற்றால் ஓட்டம் பிடித்த வெளி மாநில தொழிலாளர்கள் படிப்படியாக தமிழகம் திரும்புவதால் கட்டுமான பணிகள் சுறுசுறுப்படைந்து உள்ளன. இதனால் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பணிகளை விரைந்து முடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இது கட்டுமான துறைக்கு புத்துயிர் அளிப்பதாக உள்ளது.
![]()
|
இதுகுறித்து இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: தற்போது கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தப்படும் நிலையில் சிமென்ட் மணல் செங்கல் போன்றவற்றின் விலை மெல்ல உயர்ந்து வருகிறது. இது மட்டுமின்றி கட்டுமான பணிக்கான டி.எம்.டி. கம்பிகள் பி.வி.சி. பைப்கள் அலுமினிய பொருட்கள் ஆகியவற்றின் விலையும் உயர துவங்கி உள்ளது.
இதனால் கட்டுமான செலவு சதுர அடிக்கு 200 ரூபாய் வரை உயர்ந்து 2000 ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து வீடுகளின் விலை படிப்படியாக சதுர அடிக்கு 1500 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.