வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணி சார்பில், காங்., வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., பழனிசாமி அணி தரப்பில், தென்னரசு களத்தில் உள்ளார். இவருக்கு, பா.ஜ.,- - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கட்சியின் பழைய செல்வாக்கை நிரூபிக்க, தே.மு.தி.க.,வும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அ.தி.மு.க.,விற்கு ஆதரவு பெருகி வருவதால், காங்கிரசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, போட்டியில் உள்ள சிறிய கட்சிகளை இழுக்க முயற்சி நடந்து வருகிறது.
இதற்காக, தே.மு.தி.க., வேட்பாளரை வாபஸ் பெற வைக்க, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷிடம், காங்கிரஸ் பேச்சு நடத்திவருகிறது.
![]()
|
அ.தி.மு.க., தரப்பிலும், தே.மு.தி.க., ஆதரவை பெற முயற்சி நடந்து வருகிறது. இதற்காக, பா.ஜ., தரப்பில், தே.மு.தி.க., தலைமையிடம் ரகசிய பேச்சு நடந்து வருகிறது.