சிருங்கேரி பவானி அம்பாள் மலஹானிகரேஸ்வர சுவாமி கோயிலில் பிப். 12ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
1200 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் சிருங்கேரியில் சாரதா பீடத்தை ஸ்தாபித்தார். இந்த மடத்தின் 35வது பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகள், பாரதீ தீர்த்த மஹா சுவாமியுடன் இணைந்து 1985ம் ஆண்டில் மலஹானிகரேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தினார்.
தற்போதைய பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள், ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் ராஜகோபுரத்தை நிர்மாணித்து பிப்., 12ல் கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர். மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுரிசங்கர் கூறியதாவது:
இன்று மகாகணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. உலக நன்மைக்காக லக்ஷ மோதக மகா கணபதி ஹோமம் அதிருத்திர மஹா யாகம் சதுர்வேத பாராயணம் 18 புராணங்களின் பாராயணம் பஞ்சாக்ரீ ஸ்ரீவித்யா முதலான ஜப ஹோமங்கள் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடக்க உள்ளன. பிப்., 12 காலை 7:00 மணிக்கு மூலாதார மூர்த்திகள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
பிப்., 15ல் மஹா உற்ஸவ கொடியேற்றம், 18ல் மஹா சிவராத்திரி பூஜைகள், 20ல் தேரோட்டம் 21ல் தெப்ப உற்ஸவம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -