சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., சார்பில், இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இடைத் தேர்தலில், வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இளங்கோவனுக்கு ஆதரவாக, தி.மு.க., அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு, தேர்தல் பணியாற்றி வருகின்றனர். முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி, வரும், 19ம் தேதி முதல், தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வரும், 24, 25ம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.