பருவ மழை குறைந்ததால் நிலத்தடி நீர் சரிவு: நீர் சேகரிப்பில் கூடுதல் கவனம் தேவை

Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வடசென்னையில் பகுதியில் இரண்டு மண்டலங்களை தவிர, சென்னை மாநகராட்சியின் மற்ற 13 மண்டலங்களிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், மழை நீர் கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.மக்கள் தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் அபகரிப்பு, சாலை, வடிகால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வடசென்னையில் பகுதியில் இரண்டு மண்டலங்களை தவிர, சென்னை மாநகராட்சியின் மற்ற 13 மண்டலங்களிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், மழை நீர் கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் அபகரிப்பு, சாலை, வடிகால் கட்டமைப்பில் தொலைநோக்கு பார்வையின்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காமை உள்ளிட்ட காரணங்களால், சென்னையில் நிலத்தடிநீர் போதிய அளவு தங்குவதில்லை.



latest tamil news




210 நீர்நிலைகள்



விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சியில், ஏரி, குளங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. 2011ம் ஆண்டு விரிவாக்கத்திற்கு பின், சென்னையை சுற்றி உள்ள பல ஏரி, குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்தன.

இரண்டு ஆண்டுகளுக்குமுன், 210 நீர்நிலைகளை கண்டறிந்து, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. வடிகால் உள்பகுதி, சாலையோரம், பூங்கா என, 2,450 உறை கிணறுகள் அமைக்கப்பட்டன.

இதனால், சில ஆண்டுகளாக, நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. தற்போது, சாலை, கால்வாய், வடிகால் கட்டமைப்புகள் பல நுாறு கோடி ரூபாயில் சீரமைக்கப்படுகின்றன. ஆனால், மழை நீர் பூமிக்குள் செல்லும் வகையிலான, கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.


25 சதவீதம் குறைவு



சென்னை மாநகராட்சி, மணல், களிமண், பாறை போன்ற, அடுக்குகளை கொண்ட நிலப்பரப்பு. நிலத்தடி நீரை கணக்கிட, 200 வார்டிலும், 2021ம் ஆண்டு, நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டன.

இதனால், ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டம் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. கடந்தாண்டு, கோடை வெயிலால், மார்ச், ஏப்ரல் மே மாதங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. ஜூன் மாதம் பெய்த எதிர்பாராத மழையால், ஜூன், ஜூலை மாதங்களில் 6 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

ஆகஸ்ட் மாதம், ஆறு மண்டலங்களில், நிலத்தடி நீர்மட்டம் 3 அடி வரை குறைந்தது. எட்டு, ஒன்பது மண்டலங்களில், நான்கு அடி வரை அதிகரித்துள்ளது. மொத்த மண்டலங்களை கணக்கிடும்போது, 5 அடிவரை உயர்ந்தது.


latest tamil news



இந்நிலையில், அக்., மாதம் துவங்கிய வடகிழக்கு பருவ மழை, டிச., 13ம் தேதி முழு நிறைவு பெற்றது. ஆண்டு சராசரி அளவில், 2021ஐ விட, 2022ல், 25 சதவீதம் மழை குறைந்துள்ளது. சென்னையில், வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தும் பருவமழை, துவக்கத்தில் சில நாட்கள் பெய்துவிட்டு பின் குறைந்தது.

இந்திய கடற்பகுதியில் நிலவும், 'லா நினா' என்ற வெப்பம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றத்தால், தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை, வடகிழக்கு மாநிலம் மற்றும் கடலில் பெய்ததால், பருவ மழை குறைந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

காலநிலை மாற்றத்தால், பருவ மழை கிடைக்கவில்லை. குறிப்பிட்ட இடங்களில் அதிகமாகவும், பல பகுதிகளில் குறைவாகவும் மழை பெய்தது. பூமிக்குள் போதிய அளவு நீர் இறங்காததால், நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. சென்னையின் குடிநீர் தேவையை, ஏரி, கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் வழியாக நிவர்த்தி செய்வதுடன், கோடையையும் சமாளிக்க முடியும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, முறையான மழைநீர்
சேகரிப்பு கட்டமைப்பு வழியாக, நிலத்தடி நீர் பிரச்னையை ஓரளவு தீர்க்க முடியும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
09-பிப்-202321:57:34 IST Report Abuse
NicoleThomson தமிழன் அதுவும் உடன்பிறப்பு தமிழன் யோசிக்கவே முடியாதவன் என்று இவர்கள் முடிவே செய்துவிட்டார்கள் போல , எவ்வளவு மழை பெய்தும் ஒன்றும் இல்லை என்று தைரியமா கூறுறாங்க பாருங்க , அங்கே நிக்குறாங்க ஆட்சியாளர்கள் , உடன்பிறப்பே போன வருஷம் சரியா மழையே பெய்யவில்லை ஒகே?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-பிப்-202317:06:22 IST Report Abuse
Girija ஏம்பா தெரு முழுக்க தண்ணீர் நாலாஞ் நாள் தங்கி , அதுல நீங்க வேற மழைநீர் வடிகால் என்ற பெயரில் தெருக்களையும் குட்டை குளம்மாக்கி சென்னையை நாறடித்துவிட்டு இப்போ நிலத்தடி நீர் குறைவா? டேங்கர் லாரி டெண்டருக்கு இப்பவே பிட் டா ? இதுல வேற ஹாப்பி ஸ்ட்ரீட் விளையாட்டாம்.
Rate this:
Cancel
09-பிப்-202310:01:24 IST Report Abuse
அப்புசாமி அடப்பாவிங்களா.. போன வருஷம்.மழை பிச்சிக்கிட்டு கொட்டிச்சே... தடுப்பணை, தரைச்சாலையெல்லாம் பிச்சுக்கிட்டு போச்சே.. ஏரிகள் ரொம்பி வழிஞ்சு தொறந்து உட்டீங்களே. அப்போதெல்லாம் நிலத்தடி நீரை சேமிக்கத் தோணலியா? எல்லாத்தையும் வங்காள விரிகுடாவுக்கு திறந்து உட்டுட்டு இருக்குற கெணத்தையெல்லாம் மூடி வுடு கட்டிட்டு, இப்போ நீர்மட்டம் உயரலைன்னு ஒப்பாரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X