சென்னை: வடசென்னையின் இரு கல்லுாரி மாணவர்கள் கத்தி வைத்து சண்டையிட்டதால் ரயில் பயணியர் அச்சத்தில் அலறினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 9:00 மணிக்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் பேசின்பாலம் ரயில் நிலையம் அருகே சென்ற போது வடசென்னையில் உள்ள தியாகராஜா கல்லுாரி மற்றும் அம்பேத்கர் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்ட்டது.
அதனால் இரு கல்லுாரி மாணவர்களும் தாங்கள் வைத்திருந்த கத்தியை வீசி சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள விரட்டிச் சென்றனர். அதனால் ரயிலில் இருந்த மற்ற பயணியர் அச்சத்தில் அலறினர். சிலர் தங்களது அலைபேசியில் வீடியோ' எடுத்தனர்.
தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். மேற்கண்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.