மீடியா ஃபைல் ஷேரிங்கை எளிமையாக்கும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய 5 அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் சமீப காலமாக பயனர்களுக்கு அடுத்தடுத்து ஏராளமான அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில், மெசேஜ் அனுப்புதல் முதல் வீடியோ கால் வரை, பணப்பரிமாற்றம் முதல் ஷாப்பிங் வரை எக்கசக்க வசதிகளை வழங்கி வரும் வாட்ஸ்அப் செயலி, சமீபத்தில் வாட்ஸ்அப் இல் இருந்து டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் படிக்கும் விதமான அப்டேட் ஒன்றை வழங்கியது. இதனைத்தொடர்ந்து, தற்போது மீடியா ஃபைல் ஷேரிங்கை எளிமையாக்கும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய 5 அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
![]()
|
இந்த புதிய அப்டேட் மூலம், ஒரே சமயத்தில் 100 மீடியா ஃபைல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் 30 மீடியா ஃபைல்களை மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்ப முடியும். இந்த அப்டேட், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.4.3 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
![]() Advertisement
|
அதுமட்டுமல்லாமல், 100 மீடியா ஃபைல்களை அனுப்பும் வசதியில் ஒரே புகைப்படம் அல்லது வீடியோவை பலமுறை தேர்வு செய்ய முடியாது. இந்த அப்டேட் தற்போது டெஸ்டிங்கில் இருப்பதால், இந்த அப்டேட் விரைவில் அனுவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வெளியிடப்படலாம். எனினும், எப்போது வெளியாகும் என முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
![]()
|
இதுபோக, மேலும் சில அப்டேட்களையும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. அதாவது, ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் பகுதியில் சில புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. முதலில், வாய்ஸ் ஸ்டேட்டஸ் எனும் அப்டேட்டில் பயனர்கள் அதிகபட்சமாக 30 நொடிகளுக்கு வாய்ஸ் நோட்களை தங்களின் ஸ்டேட்டஸ்-ஆக வைத்துக் கொள்ளலாம். மிக முக்கிய தனிப்பட்ட வகையில் அப்டேட்களை தெரிவிக்கும் மற்றொரு வழிமுறை இது என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.
![]()
|
அடுத்ததாக, ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ் எனும் அப்டேட்டில், ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஸ்வைப் அப் செய்து அதிகபட்சம் எட்டு எமோஜிக்களை பயன்படுத்தி தங்களின் கருத்தை தெரிவிக்க முடியும். இது இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே செயல்படுகிறது.
அதன்பின், ஸ்டேட்டஸ் லின்க் பிரீவியூஸ் எனும் அப்டேட்டில் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் குறிப்பிட்ட லின்க்-ஐ திறந்து பார்க்காமலேயே அந்த லின்க்-இல் எதுபோன்ற தரவு உள்ளது என்பதை சற்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
![]()
|
மேலும், பிரைவேட் ஆடியன்ஸ் எனும் புதிய அம்சம் என்றாலும் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு அப்டேட் தான். சமீபத்தில் தேர்வு செய்தபடி யார்யாருக்கு ஸ்டேட்டஸ் காண்பிக்கப்பட வேண்டும் என்ற காண்டாக்ட்களின் பட்டியல் சேமிக்கப்பட்டு, அடுத்த அப்டேட்டிற்கு தானாக பயன்படுத்தப்படும்.
இறுதியாக, ஸ்டேட்டஸ் ப்ரோஃபைல் ரிங்ஸ் எனும் அம்சம் பலருக்கு தெரிந்த அம்சம் தான். குறிப்பிட்ட கான்டாக்ட் ஸ்டேட்டஸ் வைத்திருப்பின், அந்த பயனரின் ப்ரோஃபைல் படத்தை சுற்றி ரிங் ஒன்று காணப்படும். இதை கொண்டு அவர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.