வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து துவங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை பாலவாக்கம் கடற்கரையில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வழங்கினார். சுவாசம் என்ற பெயரில் 234 தொகுதிகளில் பா.ஜ., சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
பின், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

இலங்கையில் 13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். இலங்கை மீனவர்கள் பிரச்னையில் பாஜ., அரசு திறம்பட கையாண்டு வருகிறது. பாஜ., அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளது. விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து துவங்கும்.
ஈரோடு கிழக்கில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்திருந்தது. நான் இலங்கை செல்ல உள்ளதால், எங்கள் கட்சி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார். இடைத்தேர்தல் குறித்து முதல்வர் பயத்தில் உள்ளார். அதனால் தான், தமிழகம் முழுவதும் உள்ள திமுக.,வினரை ஈரோட்டிற்கு வர வைத்துள்ளார். எங்களுடைய பிரசார பீரங்கியே ஈவிகேஎஸ் இளங்கோவன் தான். அவர் பேச ஆரம்பித்தால், எங்களுக்கு ஓட்டு தானாக வரும்.

பிரதமர் மோடி, 2014 ம் ஆண்டு சென்ற போது, ஜாப்னாவிற்கு இலங்கை தமிழர்களின் கலாசார மையத்திற்காக நிதி கொடுத்து, அதை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் அதுபோன்ற கலாசாரம் இருக்காது. தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில் ஒரு மையம் தயாராகி கொண்டு உள்ளது. அதன் திறப்பு விழா வரும் 11ம் தேதி இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே துவக்கி வைக்கிறார். அதற்கு, மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் முருகன் கலந்து கொள்கிறார். இலங்கையில் உள்ள பல்வேறு கட்சிகள் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சருடன் நானும் ஜாப்னாவிற்கு செல்கிறேன். இந்த பயணத்தின் போது, அங்குள்ள கட்சிகளுடன் இணைந்து சில விஷயங்கள் பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இவ்வாறு அவர் கூறினார்.
பயணம் ஏன்?
இலங்கை பயணம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னை குறித்து இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச உள்ளோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், கடந்த 1987 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13-வது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வலியுறுத்த உள்ளோம். எனக் கூறினார்.