வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:கள்ளநோட்டு (போலி கரன்சி) புழக்கம் தொடர்பாக அதிக வழக்கு பதியப்பட்டதில் தமிழகம் 3வது இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2021 ல் தேசிய குற்றப்பிரிவு ஆவண விவரப்படி அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 82 வழக்குகளும், அசாமில் 75 வழக்குகளும், தமிழகத்தில் 62 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. அடுத்த படியாக வரிசையாக மஹாராஷ்ட்டிரா 55 , ராஜஸ்தான் 54, உத்தரபிரதேசம் 42 வழக்குகள் பதிவாகி உள்ளன.

2021 ல் இந்தியா முழுவதும் 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் நேற்று 33 லட்சம் கள்ளநோட்டு வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.