வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்றும் 8 கோடி மக்களும் பாராட்டும் வகையில் அதனை செயல்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அரசின் முன்னெடுப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அரசு திட்டங்கள் திகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் நடைமுறைகள் குறித்தும், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது: அரசு என்பது முதல்வர் மட்டுமல்ல அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் இணைந்தது தான். அனைவரும் இணைந்து நடத்தும் நல்லாட்சி தற்போது நடக்கிறது. அதனை இன்னும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அற்புதமான திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்ல, அதனை சிறப்பாக செயல்படுத்துவதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும். 8 கோடி மக்களும் பாராட்டும் வகையில் அதனை செயல்படுத்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகாலம் பெரிய தொய்வு ஏற்பட்டிருந்தது.
அதனை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிறுசிறு சுணக்கங்களை அத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.