சேலம்: வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில், லாரி டிரைவர் உள்பட, 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம், அழகாபுரம் கணக்கு பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன், 55. லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம், டி.வி.எஸ்., ெஹவி டியூட்டி மொபட்டில் உடையாப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற டிப்பர் லாரி, மொபட் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த பாஸ்கரன், அதே இடத்தில் உயிரிழந்தார். அவரது சகோதரர் மோகன் புகார்படி அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
அதேபோல் மன்னார்பாளையம், வாய்க்கால் பட்டறை, காந்தி நகரை சேர்ந்தவர் தினேஷ், 35. பசை தயாரிக்கும் தொழில் செய்து வந்த இவர், இரு நாளுக்கு முன், 'ஹோண்டா' பைக்கில் காந்தி நகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகத்தடை மீது வேகமாக சென்றதால் நிலைதடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
மேலும் மணியனுார், நாட்டாமங்கலம் பிரதான சாலையை சேர்ந்தவர் பருண் சிங், 25. வடமாநில தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு திருவாகவுண்டனுார் பைபாஸில், 'ஆக்டிவா' மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பைக், பருண்சிங் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அதில், பைக்கில் இருந்து விழுந்த பருண்சிங் தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் இறந்தார்.