சேலம்: தலை, கழுத்து பகுதி புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, டார்கெட்டட் தெரபி, இம்யூனோ தெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. எந்த நோயாளிக்கு எந்த சிகிச்சை ஏற்றது என்பது, கட்டி உள்ள இடம், புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது, நோயாளியின் வயது, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு செய்யப்படுவது. கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் தலை, கழுத்து பகுதிக்கு சிறப்பு சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை, தலை, கழுத்து பரிசோதனை முகாமை நடத்துகிறது. இதில் மருத்துவ ஆலோசனை முற்றிலும் இலவசம். சலுகை கட்டணத்தில் சிகிச்சையும் பெறலாம். கழுத்தில் வீக்கம், ஆறாத நாள்பட்ட வாய்புண், குரலில் மாற்றம், உணவு விழுங்குவதில் சிரமம் முதலான அறிகுறி உள்ளவர்கள் பயன்
பெறலாம். இந்த முகாம், அவினாசி சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் கடந்த பிப்., 1-ல் தொடங்கியது. வரும், 28 வரை, ஞாயிறு, இதர விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை, 9:00 முதல், மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. முன்பதிவுக்கு, 87548-87568 என்ற எண்ணில் அழைக்கலாம்.