சங்ககிரி: குட்டையில் மாற்றுத்திறனாளி சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
கொங்கணாபுரம் அருகே சாணாரப்பட்டியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 50. லாரி டிரைவர். இவருக்கு மனைவி தேன்மொழி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் வசந்தகுமார், 23. மாற்றுத்திறனாளியான இவர், இடைப்பாடி கேட்டுக்கடையில் மருந்தகம் வைத்திருந்தார். மாற்றுத்திறனாளி பிரிவு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் இடைப்பாடி அருகே மலங்காட்டில், 'ஜெம் கிரானைட் மைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான குவாரியில் உள்ள குட்டை அருகே நேற்று காலை, 7:00 மணிக்கு, 'க்ரஷ்' பைக் நின்றிருந்தது. அங்கு மொபைல் போன், இருசக்கர வாகன சாவியும் கிடந்தன. இதுகுறித்து மக்கள் தகவல்படி சங்ககிரி போலீசார், தீயணைப்பு குழுவினருடன் வந்து குட்டையில் தேடினர். அப்போது, வசந்தகுமார் சடலத்தை மீட்டனர். மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக, தேன்மொழி புகார்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், தண்ணீரில் மூழ்கி இறந்தாரா, யாராவது கொலை செய்தனரா என விசாரிக்கின்றனர்.