ஓசூர்: தமிழக, பா.ஜ., - எஸ்.டி., அணி மாநில செயலாளர் பாப்பண்ணா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள், மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். அப்போது, ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி பஞ்.,க்களில், 5வது சிப்காட் அமைக்க, விவசாய நிலத்தை கையகப்படுத்த இருப்பதை, தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மேலும், ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் யானைகள் அதிகமாக உள்ளதால், விவசாய பயிர்கள் சேதமாகி வருவதுடன், மனித உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, யானைகள் உள்ள பகுதிகளில் அகழிகளை வெட்டி, சோலார் வேலி அமைத்துத்தர, தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டனர். மாநில பொறுப்பாளர் சதீஷ்குமார், துணைத்தலைவர் பண்பு, உத்தனப்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் வேலு உட்பட பலர் உடனிருந்தனர்.