தர்மபுரி: பாப்பாரப்பட்டி வேளாண் அறவியல் நிலையம் சார்பில், எலவடை கிராமத்தில், அவரை வளர்ப்பில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தலைமை வகித்தார். கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க கல்வி பயிற்சி பேராசிரியர் ஆனந்தராஜா முன்னிலை வகித்தார். பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மூலம் விவசாயிகள் தங்கள் செலவினங்களை குறைப்பது மற்றும் மகசூலை அதிகரிப்பது குறித்து, செயல் விளக்கம் அளித்தார். பேராசிரியர்கள் கார்த்திகேயன், அங்கப்பன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.