வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அதானி விவகாரத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் நேற்று பதிலளிக்கவில்லை. மோடி எப்போதும் உண்மையான பிரச்னையை திசை திருப்புக்கிறார் என காங்., தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் பேச்சை சபைக்குறிப்பில் இருந்து நீக்கணும்
பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று முன்தினம் சபையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஆட்சேபனைக்குரியவை.பார்லிமென்ட் விதிகளின்படி, சபையில் ஒருவர் மீது மற்றொரு உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டுமெனில் முன்கூட்டியே, 'நோட்டீஸ்' அளிக்க வேண்டும்.
இவை எதையும் பின்பற்றாமல், ராகுல் தன் இஷ்டத்துக்கு பேசிய பேச்சுக்களை சபைக்குறிப்பில் இருந்து நீக்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

நீக்க முடியாது:
இது குறித்து கார்கே பேசியதாவது: லோக்சபாவில் ராகுல் கூறிய கருத்துகளை, அனைத்து விதிகளையும் கருத்தில் கொண்டு நீக்குதல் செய்யப்பட வேண்டும். அவர்கள் எந்த வார்த்தைகளை நீக்க முடியாது என்பதற்கான விதிகள் பற்றி நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். நான் அவர்களுக்கு 3 பக்க பதில் அளித்துள்ளேன்.
அதானி விவகாரத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் நேற்று பதிலளிக்கவில்லை. மோடி எப்போதும் உண்மையான பிரச்னையை திசை திருப்புக்கிறார். அதானி எப்படி கோடீஸ்வரரானார். மேலும் அவருக்கு எப்படி கடன்கள் வழங்கப்பட்டன என்ற கேள்விகளை நாங்கள் எழுப்பினோம். ஆனால் பதிலளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.