கரூர்:
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது, கள், குட்கா போன்ற போதை பொருட்களை விற்ற ஆறு பேரை போலீசார் கைது
செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சரவணன், உதயகுமார் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் லாலாப்பேட்டை, வாங்கல், சின்னதாராபுரம் பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்றதாக மஞ்சுளா, 46; புகழேந்தி, 40; பழனியம்மாள், 63; கள் விற்றதாக சேர்மன் துரை, 48; ஆகிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 25 மதுபாட்டில்கள், 2 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., அப்துல்லா உள்ளிட்ட போலீசார், ரயில்வே ஸ்டேஷன், திண்ணப்பா கார்னர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, குட்கா பொருட்களை விற்றதாக காமராஜபுரத்தை சேர்ந்த முருகப்பன், 62; எஸ்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த கனகராஜ், 31; ஆகிய இருவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement