கரூர்:
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது.
அதில், களப் பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், குற்ற குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும், நில அளவையர் முதல் கூடுதல் இயக்குனர் வரை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில், மாநில அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர்கள் ஞானதம்பி, செல்வராணி, நில அளவை அலுவலர்கள்
ஒன்றிப்பு கோட்ட தலைவர் தங்கவேல், மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொருளாளர் தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement