குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் வைரப்பெருமாள் சன்னதி, விநாயகர் சன்னதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் தான்தோன்றிமலை உதவி ஆணையர் நந்தகுமார் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. அய்யர்மலை அரசு கலை கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் 60 பேர் மற்றும் கோவில் செயல் அலுவலர் அனிதா, ஆய்வாளர் கனிகுமார், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் பெரியசாமி, புவனேஸ்வரி, கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், பக்தர்கள், ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 445 மற்றும் 36 கிராம் தங்கம், 163 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
காணிக்கையை, இந்தியன் வங்கி மேலாளர் திவ்யா, காசாளர் ரம்யா ஆகியோர் நேரடியாக வந்து பெற்றுக்கொண்டு, கோவில் வங்கி கணக்கில் வரவு வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement