குளித்தலை: தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், கடவூர் வட்டார அளவிலான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறன் நலத்துறை அலுவலர் காமாட்சி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் வரதராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் அரசு திட்டங்கள் குறித்து பேசினர்.
இதில், கடவூர் யூனியன் பகுதிகளில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், புற உலக சிந்தனை குறைபாடு, காது கேளாதவர், பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள், உடல் இயக்க குறைபாடு, மூளை முடக்குவாதம், தசை இயக்க குறைபாடு போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ள 57 மாணவ, மாணவியருக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டன.
மேலும், மருத்துவ மதிப்பீடு, தேசிய மாற்று திறனாளி அடையாள அட்டை வழங்குதல், புதுப்பித்தல், உதவித்தொகை பெறுவதற்கான பதிவுகள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.