மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், இன்று மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
மல்லசமுத்திரம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜராஜேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில், மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில் பிறப்பு முதல், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடக்க உள்ளது.
பார்வையின்மை, குறைப்பார்வை, தொழுநோய், காதுகேளாமை, உடலியக்க குறைபாடு, குள்ளத்தன்மை, அறிவுத்திறன் குறைபாடு, மனநோய், புறஉலக சிந்தனை குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைசிதைவு, மூளை நரம்பு சார்ந்த குறைபாடு, கற்றல்திறன் குறைபாடு, விழிதிசு குறைபாடு, பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு, ரத்த சம்பந்தமான குறைபாடு, ரத்த உறையாமை, செல்பிரிதல் குறைபாடு, பல்வகை மாற்றுத் திறனுடன் இணைந்த காது கேளாமை, ஆசிட் வீச்சால் ஏற்படும் பாதிப்பு, சர்க்கரை நோயால் ஏற்படும் இருதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.