திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே தனியார் கல்லுாரி மாணவன், பஸ்ஸில் ஏறும் போது தவறி விழுந்ததில், பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருச்செங்கோடு பரமத்தி வேலூர் ரோட்டில் அறநிலையத்துறை சார்பில் நடத்தபடும் அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரியில் திருச்செங்கோடு, எஸ்.என்.டி.,ரோடு பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் மகன் சரவணன், 19. பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாலை கல்லுாரி முடிந்த பின், ஜேடர்பாளையத்தில் இருந்து திருச்செங்கோடு வரும் அரசு டவுன் பஸ்சை நிறுத்துவதற்குள் இடம் பிடிக்க ஓடி ஏறினார். அப்போது தவறி விழுந்ததில் பஸ்ஸின் பின்பக்க சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.