சென்னை: இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு குறைந்துவிட்டது என அமமுக தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது
சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை;
தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்தவரை இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்தது. ஆனால் இப்பொழுது இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.