Egg price fixed at 440 paise in Tamil Nadu, Kerala | தமிழகம், கேரளாவில் முட்டை விலை 440 காசாக நிர்ணயம்| Dinamalar

தமிழகம், கேரளாவில் முட்டை விலை 440 காசாக நிர்ணயம்

Added : பிப் 09, 2023 | |
நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.அதையடுத்து, 460 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசு குறைத்து, 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வடமாநிலங்களில் குறைத்துள்ளதால்,


நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
அதையடுத்து, 460 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசு குறைத்து, 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வடமாநிலங்களில் குறைத்துள்ளதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 480, ைஹதராபாத், 415, விஜயவாடா, 445, பர்வாலா, 402, மும்பை, 475, மைசூர், 465, பெங்களூரு, 465, கொல்கத்தா, 490, டில்லி, 421 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையை, 5 ரூபாய் குறைத்து, ஒரு கிலோ, 74 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த கறிக்கோழி விலையை, ஒரு ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ, 80 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X