கிருஷ்ணகிரி: காட்டிநாயனப்பள்ளி
யில் நடக்கும் மாட்டுச்சந்தை
யில், மாடுகள் வரத்து குறைந்து, சந்தை களையிழந்து காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி, ஏழு நாட்கள் மாட்டுச்சந்தை நடக்கும். மாடுகளை வாங்கவும், விற்கவும் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுார், கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் வந்து செல்வர். கடந்த, 10 ஆண்டுகளாக இச்சந்தைக்கு மாடுகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தற்போது நடந்து வரும் இச்சந்தையில், மாடுகள் வரத்து மிகவும் குறைந்து சந்தை களையிழந்து காணப்படுகிறது.
இதுகுறித்து, விவசாயி கள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: கொரோனா பரவலால் மாட்டுச்சந்தை, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. இச்சந்தைக்கு குறைந்த பட்சம், 5,000 மாடுகள் வந்த நிலையில் தற்போது, 500 மாடுகள் மட்டுமே வந்துள்ளன. உழவுக்கு இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிப்பால், நாட்டின மாடுகள் வளர்ப்பு வெகுவாக குறைந்து விட்டது. மாட்டு வண்டிகளும் மிகவும் அரிதாகி விட்டதால், எருது
விடும் விழாக்களுக்காக மட்டுமே, மாடுகளை வளர்க்கின்றனர். இதனால், நாட்டு மாடுகள் வெகுவாக குறைந்துள்ளன. இங்கிருக்கும் குறைந்த அளவிலான நாட்டின மாடுகளையும், கேரளா
வில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வாங்கிச் செல்கின்றனர். அழிந்து வரும், நாட்டின மாடுகளை வளர்க்க, அரசு ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.