சென்னை: கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையில் உள்ள கல்குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கிருஷ்ணன் என்பவர் மனு இன்று(பிப்.,09) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: கோவையில் சட்டவிரதோமாக செயல்படும் கல் குவாரியில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா?. கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.