சுஸுகி நிறுவனம் தனது ஜிக்ஸர் (Suzuki Zixer) மாடலில் அப்டேட் வெர்ஷனை வெளியிட்டுள்ளது.
இந்திய சந்தையில், சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளில், ஸ்கூட்டர்களைத் தவிர பைக்குகள் அவ்வளவு பிரமாதமாக விற்பனையாகவில்லை. அதிலும் இளசுகளை கவருவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட சுஸுகி ஜிக்ஸர் மாடல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. யமஹா நிறுவனத்தின் கடுமையான போட்டியால் சுஸுகி ஜிக்ஸர் பைக்கின் விற்பனை மந்தமானது. இதனை மீட்டெடுக்கவே சுஸுகி நிறுவனம் அதே ஜிக்ஸர் மாடலில் 2023ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை வெளியீடு செய்துள்ளது.
![]()
|
விற்பனையை பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதத்தில், இந்த ஜிக்ஸெர் பைக்குகளுக்கு விற்பனையில் போட்டியாக உள்ள யமஹா ஆர்15 பைக்குகள் 7,427 யூனிட்களும், யமஹா எம்டி-15 பைக்குகள் 6,335 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், 150சிசி ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக்குகள் மொத்தமாக கடந்த நவம்பரில் 649 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஜிக்ஸர் மாடல் இரு விதமான பாடி ஸ்டைல்களிலும், இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது நாக்டு மற்றும் எஸ்.எஃப் எனும் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளாக வரவுள்ளது. அதுபோக, 50சிசி மற்றும் 250சிசி என இரு எஞ்ஜின் வேரியன்ட்களிலும் கிடைக்கிறது.
![]()
|
2023 சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளில் மொபைல் போன் இன்கம்மிங் கால், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் அலார்ட், மிஸ்டு கால்கள், ஹை ஸ்பீடு எச்சரிப்புகள், போன் பேட்டரி லெவல் டிஸ்பிளே மற்றும் பயணத்திற்கான நேரம் உள்ளிட்ட அட்வான்ஸ்டு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வழங்கப்பட்டுள்ள புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் திரை ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே சாதனங்களுடன் இணையக்கூடியது. அத்துடன் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனையும் பெறலாம்.
![]()
|
150சிசி ஜிக்ஸர் பைக்குகள் மெட்டாலிக் சோனிக் சில்வர்/ (Metallic Sonic Silver) பேர்ல் ஆரஞ்சு, (Pearl Orange) மெட்டாலிக் ட்ரைடன் நீலம் (Metallic Triton Blue)மற்றும் பளபளப்பான ஸ்பார்கிள் கருப்பு (Sparkle Black) என்ற 3 புதிய பெயிண்ட் தேர்வுகளும், ஜிக்ஸர் 250 ஸ்ட்ரீட் பைக்கிற்கு மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் நீலம் (Metallic Matte Stellar Blue) மற்றும் மெட்டாலிக் மேட் கருப்பு நம்பர்.2 (Metallic Matte Black)என்ற 2 புதிய பெயிண்ட் தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜிக்ஸர் 250 பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நிறத்தேர்வுகளுடன், ஜிக்ஸர் எஸ்.எஃப்250 பைக்கிற்கு கூடுதலாக மெட்டாலிக் சோனிக் சில்வர்/ மெட்டாலிக் ட்ரைடன் நீலம் என்ற பெயிண்ட் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
![]()
|
2023 ஜிக்ஸர் 150 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,40,500 ஆகவும், எஸ்.எஃப் 150 பைக்கின் விலை ரூ.1,45,500, ஆகவும் ஜிக்ஸர் 250ன் விலை ரூ.1,95,000 ஆகவும் ஜிக்ஸர் எஸ்.எஃப்250-ன் விலை ரூ.2,02,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மெட்டாலிக் சோனிக் சில்வர்/ மெட்டாலிக் ட்ரைடன் நீல நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிக்ஸர் எஸ்.எஃப்250 பைக்கின் எக்ஸ்டார் எடிசன் ரூ.2,02,500 என்ற விலையில் கிடைக்கும்.