சுந்தர் பிச்சை தலைவராக இருக்கும் கூகுள், செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளம் ஒன்றை விரைவில் தொடங்கவிருக்கிறது. 'பார்ட்' என்கிற அந்தத் தளம் தற்போது சிலருக்கு மட்டும் சோதனைக்காக வழங்கப்பட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன் வெளிவந்த 'ஓப்பன் ஏ.ஐ.,' என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி அமைப்பு நடத்தும், 'சாட் ஜி.பி.டி.,' தளத்தில் கேள்விகளை உள்ளீடு செய்தால், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் இணையத்தை அலசி, சில நொடிகளில் புத்திசாலித்தனமான பதிலைத் தரும்.
தற்போது இலவச சோதனை ஓட்டத்திலிருக்கும் சாட் ஜி.பி.டி., விரைவில்1,600 ரூபாய் மாதச் சந்தாவாகப் பெற்று, கடந்த நிமிடம் வரையிலான தகவல்களை ஒப்பு நோக்கி, அறிவு செறிந்த பதில்களைத் தரும் உரையாடல் சேவையாக சாட் ஜி.பி.டி., மாறும்.
சாட் ஜி.பி.டி., யைப் போலவே, கூகுளின் 'பார்ட்' உரையாடல் தளமும் கேள்வி கேட்டால், ஒரு அறிவுள்ள மனிதர் மறுமுனையில் இருப்பது போல, பொருளுள்ள பதிலை தரும்.
தலைப்பைக் கொடுத்து ஒரு சிறுகதை, கட்டுரை, மின்னஞ்சல், பள்ளி வீட்டுப்பாடும் என்று எதையும் சில நொடிகளில், முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்.