மீதமாகும் உணவுப் பொருட்கள், குப்பை மேட்டுக்குப் போவது பெரும் பொருளாதார இழப்பு மட்டுமல்ல, காற்றில் மீத்தேன் மாசு கலப்பதற்கும் அது வழிவகுக்கிறது. அத்தோடு, பயனுள்ள சத்துக்களும், அதைச் சமைக்க உதவிய எரிபொருளும் வீணாகிறது.
வீடுகளில் வீணாகும் உணவுப் பொருட்களை மட்டும் கோழித் தீவனமாக மாற்ற முடியும். ஆனால், அதை செய்வதற்கு இல்லத்தரசிகளால் முடியாது.
எனவே அதற்கென ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர் 'மில் இன்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் விஞ்ஞானிகள்.
பார்க்க குப்பைத் தொட்டி போல இருக்கும் அந்தக் கருவியில் வீணாகும் உணவு, கெட்டுப்போன உணவுகளைக் கொட்டிவிடவேண்டும், பிறகு அந்தக் கருவி, இரவு முழுதும் அதை உலர்த்தி, சுண்டவைத்து, துர்நாற்றத்தைப் போக்கி, துகள்களாக மாற்றிவிடுகிறது.
கருவி நிரம்பியதும், மில் இன்டஸ்ட்ரீசை அழைத்தால், அவர்கள் வந்து வாங்கிச்சென்று அதை கோழித்தீவனமாக மாற்றிவிடுவர். இதை சந்தா அடிப்படையில் அமெரிக்காவில் சில நகரங்களில் மில் இன்டஸ்ட்ரீசார் அறிமுகப்படுத்திஉள்ளனர்.