வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ராஜ்யசபாவில் உரையாற்ற துவங்கியதும் எதிர்கட்சியினர் அதானி, அதானி என குரல் எழுப்பி எதிர்கட்சியினர் கூச்சலிட்டனர்.

கோஷங்கள் மத்தியில் பிரதமர் தொடர்ந்து பேசினார். அவர் பேசியதாவது: எதிர்கட்சியினர் அவையில் இவ்வாறு நடந்து கொள்வது நல்லதல்ல. இதனை மக்கள் கவனித்து கொண்டுள்ளனர்.
எங்கள் மீது சேற்றை வாரி வீசினால், தாமரை செழுமையாக மலரும். இது போன்ற எதிர்கட்சி நடவடிக்கையால் பா.ஜ., மேலும் மலர்ந்து வெற்றியை நோக்கி செல்லும். இதற்கு அவர்கள் உதவுகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். காங்., ஆட்சியில் நடக்காத அளவுக்கு 27 லட்சம் கோடி மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. ஜன்தன் வங்கி கணக்கு மூலம் இது சாத்தியமானது. தொழில்நுட்ப ரீதியில் இந்தியா வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.

சாதாரண ஏழைமக்களை கருத்தில் கொண்டு நாங்கள் உழைத்து வருகிறோம். 25 கோடி பேருக்கு சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். எவ்வித வேறுபாடும் பார்க்காமல் ஏழைகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறோம்.
நாங்கள் தான் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றுகிறோம். நாட்டில் 110 மாவட்டங்களை தேர்வு செய்து கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறோம் .இதனால் 3 கோடி மலை வாழ் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
Advertisement