பனித் துகள் மற்றும் கட்டிகள் எல்லாமே ஒரே வகைதானே என்று நீங்கள் சிந்திக்கலாம். ஆனால், நீர் எந்த வடிவில் உறைந்து பனியாகிறது என்பதைப் பொருத்து ஏற்கனவே 20 வகைகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு உள்ளனர்.
அண்மையில், லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 21வது ரகமான மிதமான அடர்த்தியுள்ள வடிவமற்ற பனியை உருவாக்கியுள்ளனர்.
எப்படி? வழக்கமான பனித்துகள்களை எக்கு குளிகைகளுடன் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, -200 டிகிரி சென்டிகிரேடில் வைத்து வேகமாக அதிரச் செய்தனர்.இந்த அதிர்வு, பனியின் வழக்கமான படிகமாகும் முறையை நிலைகுலையச் செய்தது.
இதன் விளைவாக உருவாக பனித்துகள்கள்தான் மிதமான அடர்த்தியுள்ள வடிவமற்ற புதிய பனியாக அடையாளம் காணப்பட்டது. இந்தவகை பனித்துகள்கள், தொலைதுார நிலவுகளில் படிந்திருக்கக்கூடும் என லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.