புதுடில்லி : ரஷ்ய அதிபர் புடினுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இருநாட்டு உறவு குறித்து, ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், இரண்டு நாட்கள் பயணமாக, ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாடிமிர் புடினை இன்று (பிப்.,9) சந்தித்த அவர், இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தினார்.
கஜகஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, தஜிகிஸ்தான், தர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்து கொண்ட, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும், அஜித்தோவல் கலந்து கொண்டார். அதில், ஆப்கானிஸ்தான் மக்களை இந்தியா தேவைப்பட்டால் பாதுகாக்கும், எந்தவொரு நாடும், அந்நாட்டுடன் பயங்கரவாத தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது எனக்கூறியுள்ளார். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.