சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ரூ.10 லட்சத்தில் 16 வீடுகள் கட்டினோம்!

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
கோடுகளால் இறை உருவங்களையும், கோவில்களையும் உயிர்ப்பிக்கும் ஓவியர் பிரபாகர்: 'எண்ணங்களின் சங்கமம்' என்ற அமைப்பை, ௨௦௦௫ல் துவக்கினேன். நானும், மனைவி நிர்மலாவும், நிறைய பயணம் செய்வோம்.'எண்ணங்களின் சங்கமம்' வாயிலாக, 1,000 அமைப்புகளை ஒருங்கிணைத்து, அடித்தட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம்.கல்வி, வாழ்வாதாரம், இருப்பிடம், இது மூணும் தான், இருளர்களோட அடிப்படை தேவைகள்.
We built 16 houses for Rs.10 lakh!   ரூ.10 லட்சத்தில்  16 வீடுகள்  கட்டினோம்!

கோடுகளால் இறை உருவங்களையும், கோவில்களையும் உயிர்ப்பிக்கும் ஓவியர் பிரபாகர்: 'எண்ணங்களின் சங்கமம்' என்ற அமைப்பை, ௨௦௦௫ல் துவக்கினேன். நானும், மனைவி நிர்மலாவும், நிறைய பயணம் செய்வோம்.

'எண்ணங்களின் சங்கமம்' வாயிலாக, 1,000 அமைப்புகளை ஒருங்கிணைத்து, அடித்தட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம்.கல்வி, வாழ்வாதாரம், இருப்பிடம், இது மூணும் தான், இருளர்களோட அடிப்படை தேவைகள்.

நிரந்தரமாக வீடு வந்துட்டா அரசு சான்றுகள், நலத் திட்ட உதவிகள் கிடைச்சுடும்; படிச்சிட்டா, உரிமைகளை அவங்களே கேட்டு வாங்கிக்குவாங்க; தொழில் இருந்துட்டா யார்கிட்டயும் போய் நிற்கத் தேவையில்லை. நாங்க, இது மூன்றையும் இலக்கா வைத்து வேலை செய்கிறோம்.

பழவேற்காடில், 80 இருளர் வீடுகள் இருக்கு. எல்லாரும் தண்ணிக்குள்ள இறங்கி, தரையை தடவி மீன் பிடிக்கிறவங்க. பலரிடம் உதவி பெற்று, 34 பேரை தேர்வு செய்து, 'பைபர்' படகு வாங்கித் தந்தோம்; இதனால், அவங்க வாழ்க்கை மாறியிருக்கிறது.

கடலுார் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், இரவு பள்ளிக்காக, 2 லட்சம் ரூபாய் செலவில் ஒரு குடில் அமைத்தோம்.அதுபற்றி, சமூக வலைதளத்தில் எழுதிய பதிவை பார்த்துட்டு, நல்லுள்ளம் கொண்ட மனிதர் ஒருவர், 'பத்துக் குடிலுக்குப் பணம் தரேன், கட்டுங்க'ன்னார். தற்போது, 17 இரவு பள்ளிகளும் அழகான குடிலில் நடக்குது.

என் பிள்ளைகள் படித்து முடித்து வேலைக்குப் போயிட்டாங்க. நான், ஒரு நிறுவனத்துல, 'கன்சல்டன்டா'க இருக்கேன். என் வாழ்க்கைக்கும், பயணங்களுக்கும் தேவையான பணம் அதில் கிடைக்குது; வாழ்க்கை நிறைவாக இருக்கிறது.

நிர்மலா: ஜெய்பீம் படம் வந்த பின், இருளர்கள் பத்தி ஓரளவுக்கு கவனம் வந்திருக்கு. கடுமையான ஒரு மழைக் காலத்தில், விருத்தாசலம் பக்கத்தில் இருக்கிற தாழைநல்லுார் என்ற கிராமத்துக்கு போனோம்.பெருமழையில குழந்தைகளோடு, ஒரு புளிய மரத்தடியில, உடம்பெல்லாம் நனைஞ்சு நடுங்கியபடி இருந்தாங்க அந்த மக்கள்.

அன்னைக்கே அமைப்புல இருக்கிற தோழர்கள்கிட்ட பேசி, 10 லட்சம் ரூபாய் சேர்த்து, தரமான அடித்தளத்துடன், 16 வீடுகள் கட்டி அந்த மக்கள் கைகளில் தந்தோம். இதை சமூக வலைதளங்களில் எழுதிய பின், நிறைய பேர் பங்களிப்பு செய்ய முன்வந்தனர்.

அதையும் வைத்து, அந்தக் குடியிருப்புக்கு சாலை போட்டோம்; அவங்க வீட்டுக்குள்ளேயே தண்ணீர் வர்ற மாதிரி, 'பைப் லைன்' போட்டோம்; தெருவிளக்குகள் அமைத்தோம்; பெண்களுக்கு தையல் பயிற்சி தந்து, மிஷின் வாங்கித் தந்தோம்.ஒரு அம்மா, வீட்டுக்கு ரெண்டு ஆடுகள் வாங்கித் தந்தாங்க. சமீபத்தில் அரசு உதவியுடன், வலுவான கான்கிரீட் வீடுகள் அமைத்து தந்துள்ளோம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Manikumaar S.V. - Chennai,இந்தியா
10-பிப்-202309:06:47 IST Report Abuse
Manikumaar S.V. மிக பெரிய தொண்டு இருளர் சமுதாயத்திற்கு. உங்கள் இருவர் சேவை தொடர வாழ்த்துகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X