காஞ்சிபுரம், காஞ்சி சங்கர மடத்தில் வரும் 18 ம் தேதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா நடக்கிறது.
காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக பொறுப்பேற்று ஆசி வழங்கி வரும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ,55 வது ஜெயந்தி விழா வரும் 18ம் தேதி நடக்கிறது.
இதற்காக 16ம் தேதியில் இருந்து சங்கர மடத்தில் சிறப்பு ேஹாமங்கள் பிராத்தனைகள் நடக்கின்றன. வரும் 18ம் தேதி மடத்தில் பிருந்தா வனத்தில் உள்ள மகா சுவாமிகள் திருமேனியில் உள்ள ஹஸ்தம், வைரக்கல்லால் பதிக்கப்பட்ட கை பொருத்தப்பட உள்ளது.
அன்று காலை காமாட்சி அம்மன் கோவில் ஆதி சங்கரர் சன்னிதியில் பூஜை செய்து அங்கிருந்து வைரக்கல் பதிக்கப்பட்ட ஹஸ்தம் சங்கர மடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
காலை 11: 00 மணிக்கு அதற்கான சிறப்பு பூஜைகள் முடிந்து மஹா சுவாமிகள் திருமேனியில் உள்ள கையில் வைரக்கல் பதித்த ஹஸ்தம் பொருத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடைபெறும் என காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீகாரியம் சுந்தரேசய்யர் தெரிவித்தார்.