பிஜியில் நடைபெறும் உலக ஹிந்தி மாநாடு: அமைச்சர் ஜெய்சங்கர் துவக்கி வைக்கிறார்

Updated : பிப் 12, 2023 | Added : பிப் 12, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி,-பிஜியில் நடைபெற உள்ள 12வது உலக ஹிந்தி மாநாட்டை, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 15ம் தேதி துவக்கி வைக்க உள்ளார். பசிபிக் கடல் தீவு நாடான பிஜியில், 15 முதல் 17ம் தேதி வரை, 12வது உலக ஹிந்தி மாநாடு நடைபெறுகிறது. இது குறித்து, வெளியுறவுத் துறை செயலர் சவுரப் குமார் கூறியுள்ளதாவது:பிஜியில் நடைபெறும் 12வது உலக ஹிந்தி மாநாட்டை, அந்நாட்டு பிரதமர் சித்திவேணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-பிஜியில் நடைபெற உள்ள 12வது உலக ஹிந்தி மாநாட்டை, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 15ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.

பசிபிக் கடல் தீவு நாடான பிஜியில், 15 முதல் 17ம் தேதி வரை, 12வது உலக ஹிந்தி மாநாடு நடைபெறுகிறது.latest tamil news


இது குறித்து, வெளியுறவுத் துறை செயலர் சவுரப் குமார் கூறியுள்ளதாவது:

பிஜியில் நடைபெறும் 12வது உலக ஹிந்தி மாநாட்டை, அந்நாட்டு பிரதமர் சித்திவேணி ரபுகாவுடன் இணைந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 15ல் துவக்கி வைக்கிறார்.

மூன்று நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில், இணை அமைச்சர்கள் முரளீதரன், அஜய் மிஸ்ரா உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

'ஹிந்தி: பாரம்பரிய அறிவு முதல் செயற்கை நுண்ணறிவு வரை' என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெறும் இம்மாநாட்டில், 10க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம் பெறுகின்றன.


latest tamil news


இதற்காக ஹிந்தி அறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 270 பேர் உள்ள குழு பிஜிக்கு செல்கிறது.

இந்த மாநாட்டில், 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர்சித்திவேணி ரபுகா மற்றும் முக்கிய தலைவர்களை ஜெய்சங்கர் சந்தித்து, ஆலோசனை நடத்த உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

M Ramachandran - Chennai,இந்தியா
12-பிப்-202317:42:38 IST Report Abuse
M  Ramachandran கீரமானியய் உங்களுடன் அழைத்து செல்லுங்கள் சங்கி சங்கி என்று சங்கூதுவார் .பெரியாரிஸ்ம் பரப்புவார் பெரியாரிடம் என்றால் அது என்ன ரசம் என்று அங்குள்ள மக்கள் கேட்க அது அது என்று ..... ரஸம் வடை ஞ்யாபகத்தில் இருப்பார்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-202305:07:11 IST Report Abuse
J.V. Iyer நன்றி.. ஹிந்தியை கற்க விடாமல் நம்மை கற்கால மனிதர்களாக்கிய தீய கட்சிகளுக்கு நாம் மீண்டும் வோட்டு போட்டு களப்பிரர்கள் இருண்டகாலம் தேவலாம் என்று ஆக்குவோம். திராவிடம் என்று சொல்லி சொல்லி, தமிழை மக்களிடம் மறக்கடிப்போம். இப்போது ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசும் இளைஞர்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு.
Rate this:
Cancel
Alvarkadiyan - Sydney,ஆஸ்திரேலியா
12-பிப்-202302:20:01 IST Report Abuse
Alvarkadiyan Fiji is truly a land where the descendents (30% - 40% of the population) of the "ïndetured labourers" of the British era with varying cultural backgrounds (Tamils Telugus Malayalees Bhiharies and other north Indians) have been united with Indian culture as the binding glue. They speak proudly one language Hindi and display their Indianness with no qualm. Lovely people and the locals here have a lot to learn from them.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X