வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-பிஜியில் நடைபெற உள்ள 12வது உலக ஹிந்தி மாநாட்டை, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 15ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
பசிபிக் கடல் தீவு நாடான பிஜியில், 15 முதல் 17ம் தேதி வரை, 12வது உலக ஹிந்தி மாநாடு நடைபெறுகிறது.
![]()
|
இது குறித்து, வெளியுறவுத் துறை செயலர் சவுரப் குமார் கூறியுள்ளதாவது:
பிஜியில் நடைபெறும் 12வது உலக ஹிந்தி மாநாட்டை, அந்நாட்டு பிரதமர் சித்திவேணி ரபுகாவுடன் இணைந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 15ல் துவக்கி வைக்கிறார்.
மூன்று நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில், இணை அமைச்சர்கள் முரளீதரன், அஜய் மிஸ்ரா உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
'ஹிந்தி: பாரம்பரிய அறிவு முதல் செயற்கை நுண்ணறிவு வரை' என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெறும் இம்மாநாட்டில், 10க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம் பெறுகின்றன.
![]()
|
இதற்காக ஹிந்தி அறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 270 பேர் உள்ள குழு பிஜிக்கு செல்கிறது.
இந்த மாநாட்டில், 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர்சித்திவேணி ரபுகா மற்றும் முக்கிய தலைவர்களை ஜெய்சங்கர் சந்தித்து, ஆலோசனை நடத்த உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement