விருதுநகர்,--விருதுநகரில் பிப்., 5ல் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மகள்கள் மோனிகா 13, ரித்திகா மேரியை 9, கொலை செய்ய முயன்று தற்கொலைக்கு முயன்ற தாய் ஜான்சிராணி 40, அரசு மருத்துவமனையில் பலியானார்.
விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்த அந்தோணிராஜ் 42, மஞ்சள் ஆலையில் கூலி வேலை செய்கிறார். மனைவி ஜான்சி ராணி. அடிக்கடி 2 பேருக்கும் குடும்பத்தகராறு ஏற்படும். இந்நிலையில் பிப்., 5ல் குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மூத்த மகள் மோனிகா கழுத்தை அறுத்து வீட்டில் வைத்து பூட்டியதுடன் இளைய மகள் ரித்திகாமேரியுடன் விருதுநகர்- அருப்புக்கோட்டை ரோடு அல்லம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் விழுந்து ஜான்சிராணி தற்கொலைக்கு முயன்றார்.
மகளின் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் கிழக்கு போலீசுக்கு தகவல் கூறினர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மோனிகா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜான்சி ராணி நேற்று இறந்தார்.