வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பைமஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் சிவசேனா அதிருப்தி குழு - -பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இதற்கு முன், காங்-., - தேசியவாத காங்.,- உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணி ஆட்சி இருந்தது.
![]()
|
ஆனால், சிவசேனாவின் அதிருப்தியாளர்கள் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வர, அவர்களுடன் பா.ஜ., சேர்ந்து தற்போது ஆட்சியில் உள்ளது.
சமீபத்தில் மஹாராஷ்டிராவில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்வு, காங்., - -தேசியவாத காங்.,- உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.
பவார் கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக 'பவர்புல்'லாக இருப்பவர் பிரபுல் படேல். இவர் முன்னாள் மத்திய அமைச்சர். இப்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இவர் தன் தந்தையின் 117வது பிறந்த நாளை கொண்டாட, தன் சொந்த ஊரான கோண்டியாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் படேலின் அழைப்பை ஏற்று, பா.ஜ., தலைவரும், மாநிலத்தின் துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் பங்கேற்றார். பவாருக்கு எதிரியாக கருதப்படும் பட்னவிஸ் இந்த விழாவில் பங்கேற்றது, தேசியவாத காங்கிரசாருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
![]()
|
நிகழ்ச்சியில் பட்னவிஸை புகழ்ந்து தள்ளினார் பிரபுல் படேல். பதிலுக்கு பட்னவிசும், 'நாங்கள் இருவரும் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும், சொந்த வாழ்க்கையில் நண்பர்கள்' என்றார். இதையடுத்து, சரியான நேரத்தில் தேசியவாத காங்., கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பலருடன் பிரபுல் வெளியேறி, பா.ஜ.,வை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக மஹா., அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது, பவாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அமலாக்கத் துறை சமீபத்தில் மும்பையில் உள்ள பிரபுல் படேலின் பல சொத்துக்களை முடக்கியுள்ளது. இதனால் தான் அவர், பா.ஜ.,வுடன் உறவாட முயற்சிக்கிறார் என்கின்றனர் சில தலைவர்கள். எது எப்படியோ, மஹா., எதிர்க்கட்சி கூட்டணியில் விரைவில் விரிசல் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement