மதுரை : வடகிழக்கு மாநில மாணவர்கள் 32 பேர் அகிலபாரத வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) பயணத் திட்டத்தின் கீழ் மதுரை வந்தனர்.
வடகிழக்கு மாநில மாணவர்களை ஏ.பி.வி.பி., அமைப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறது. அந்தந்த மாநில பண்பாடு, கலாசார பெருமைகளை அறிந்திட 'மாநிலங்களுக்கு இடையேயான மாணவர்களின் வாழ்க்கை அனுபவம்' (எஸ்.இ.ஐ.எல்.,) எனும் பெயரில் பயணத் திட்டத்தை 1970 லிருந்து செயல்படுத்துகிறது.
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 32 பேர் கொண்ட மாணவர்கள் குழு நேற்று மதுரை வந்தது. ஏ.பி.வி.பி., மாநில செயலாளர் கோபி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டுக் குடும்பம், விருந்தோம்பல் முறையை அறிந்திட உறுப்பினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். தெப்பக்குளம், மன்னர் திருமலை நாயக்கர் மகாலை பார்வையிட்டனர்.
இன்று (பிப்.,12) மாலை 5:30 மணிக்கு பொது வரவேற்பு நிகழ்ச்சி மதுரை தியாகராஜர் கல்லுாரியில் நடக்கிறது. 'இந்தியாவின் பிளாஸ்டிக் மனிதர்' என அழைக்கப்படும் பேராசிரியர் வாசுதேவன், ஏ.பி.வி.பி., தேசிய செயலாளர் ஹரிகிருஷ்ணா, மாநில தலைவர் சவிதா ராஜேஷ், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். வடகிழக்கு மாநில மற்றும் தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மதுரை காமராஜ் பல்கலையை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.